பழமொழிகள்-10-ஆம் வகுப்பு தமிழ்
பழமொழிகள்
1) நொறுங்கத் தின்றால் நூறு வயது.
2) உப்பிலாப் பண்டம் குப்பையிலே.
3) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
4) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
5) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
6) உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
7) நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
8) தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
9) மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
10) கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
11) தட்டான் பூச்சி தாழப்பறந்தால் தப்பாமல் மழை வரும்.
12) இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து.
13) சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
14) கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே.
15) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
16) சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
17) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
18) உழைப்பின்றி ஊதியமில்லை.
19) படித்தால் அறிவோம் ஆற்றாது.
20) அறிவே ஆற்றல்.
21) தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்.
22) பேராசை பெருநட்டம்.
23) முள்ளை முள்ளால் எடு.
24) எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது.
25) குறை குடம் கூத்தாடும்.
26) பணம் பத்தும் செய்யும்.
27) புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
28) காலம் பொன் போன்றது.
29) வருமுன் காப்பதே சிறந்தது.
30) முயற்சி திருவினை ஆக்கும்.
31) முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
32) அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
33) யானைக்கும் பானைக்கும் சரி.
34) செய்யும் தொழிலே தெய்வம்.
35) இனம் இனத்தோடே சேரும்.
36) வீட்டில் எலி வெளியில் புலி.
37) தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.
38) கல்வி கரையில கற்பவர் நாள் சில.
39) ஆழம் அறியாமல் காலைவிடாதே.
40) நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
41) காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
42) பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
43) அரசன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும்.
44) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
45) மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
46) குரைக்கின்ற நாய் கடிக்காது.
47) சிறுதுரும்பும் பல் குத்த உதவும்.
48) காலத்தே கடமையைச் செய்.
49) உயிர் கொடுப்பான் தோழன்.
50) தன் கையே தனக்கு உதவி.
51) வாழ, வாழ விடு.
52) உன்னைப்போல் பிறரையும் நேசி.
53) ஒழுக்கம் உயர்வு தரும்.
54) நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.
55) பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்.
56) செய்வன திருந்தச் செய்.
57) ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.
58) சிந்தித்துச் செயல்படு.
59) இக்கரைக்கு அக்கரை பச்சை.
60) ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்.
61) ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
62) உயிர் காப்பான் தோழன்.
63) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
64) தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
65) அழுத பிள்ளை பால் குடிக்கும்.
66) விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
67) முதற்கோணல் முற்றிலும் கோணல்.
68) ஆனைக்கும் அடி சறுக்கும்.
69) கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.
70) கல்லிலே நார் உரிக்க முடியுமா?
71) கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
72) வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
73) தருமம் தலை காக்கும்.
74) எரிவதனைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.
75) வேலியே பயிரை மேய்ந்தாற்போல.
76) தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கலாமா?
77) பழி ஓரிடம், பாவம் ஓரிடம்.
78) பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான்.
79) பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே.
80) தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
81) காலத்திற்கேற்ற கோலம் கொள்.
82) மாரியல்லது காரியம் இல்லை.
83) நுணலும் தன் வாயால் கெடும்.
84) தனி மரம் தோப்பாகாது.
85) மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.
86) ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை.
87) புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்டாற்போல.
88) கோபம் குலத்தைக் கெடுக்கும்.
89) பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல.
90) தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்.
91) நகமும் சதையும் போல.
92) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
93) பசுத்தோல் போர்த்திய புலி.
94) ஒற்றுமையே வலிமை.
95) நெருப்பில்லாமல் புகையாது.
96) வல்லவன் வகுத்ததே வாய்க்கால்.
97) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
98) சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்.
99) நொறுக்குத் தீனி வயிற்றுக்குக் கேடு.
100) மீதூண் விரும்பேல்.
101) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
102) பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்.
103) உண்டி முதற்றே உலகு.
104) தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்.
105) மேனி துலங்க குப்பைமேனி.
106) காடு இருக்கும் வரைதான் மனித வாழ்வு.
107) தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
108) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
109) ஊழி பெயரினும் தாம் பெயரார்.
110) கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.
111) அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்.
112) சுத்தம் சோறு போடும்.
113) வருமுன் காப்போம்.
114) பருவத்தே பயிர் செய்.
115) பசித்து புசி.
116) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
117) ஒன்றுறா முன்றிலோ இல்.
118) போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
119) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
120) அடியாத மாடு படியாது.
121) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
122) கெடுவான் கேடு நினைப்பான்.
123) கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
124) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி.
125) ஓட்டைச்சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
126) ஒடிந்தகோல் ஆனாலும் ஊன்றுகோல் ஆகும்.
127) கடுகளவு நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
128) தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச்சீலை.
129) ஆடிப்பட்டம் தேடி விதை.
130) மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
131) தை பிறந்தால் வழி பிறக்கும்.
132) பசியாமல் இருக்க வரந்தருவேன், கொஞ்சம் பழையது இருந்தால் போடு.
சொலவடைகள்
பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை நாட்டுப்புற மக்களும் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.
1) புண்ணுக்கு மருந்துபோட முடியும்; புனற்கூத்துக்கு மருந்து போட முடியுமா?
2) அம்மன் உடைஞ்சு போனா வெள்ளம் அழுதாலும் வராது.
3) வெள்ளச்சதுக்கம் வெள்ளாட்டுக்குச் செம்பும் பனை.
4) எறும்பு ஊறக் கல்லும் தேயும்.
5) உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்.
6) அடை மழை விட்டாலும் செடி மழை விடாது.
7) நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம்.
8) குடல் கூழுக்கு அழுததாம், கொண்டை பூவுக்கு அழுததாம்.
9) சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
10) நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
11) ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்திப்பூச்சி போதும்.
12) ஆள் கூடுனா பாம்பு சாகுமா? மைய ஊணித்தான் கரணம் போட முடியும்.
13) காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
14) இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்.
15) நாலு வீட்டுல கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்.
16) அவப்பொழுது போக்குவதிலும் தவப்பொழுது நல்லதுபாங்க.
17) பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
18) அதிர அடித்தால் உதிர விளையும்.
19) குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி.
20) அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்.
21) கார்த்திகை மாதம் பிறையை கண்ட மாதிரி.
22) அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல.
23) தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம.
24) அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது.
25) அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்.
26) ஆடையில்லா மனிதன் அரை மனிதன்.
27) ஆள் பாதி; ஆடை பாதி.
28) கேட்காத கடனும் பார்க்காத பயிரும் வீடுவந்து சேராது.
29) கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
30) பருவத்தே பயிர் செய்.
31) கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்.
32) அகல உழுவதனவிட ஆழ உழுதல் நன்று.
33) வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியக்கூடாது.
34) இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சிறகு.
35) எறும்புக்குத் தெரியாத கரும்பு இல்லை.
36) அரண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உறவு மேல்.
37) மாரியல்லது காரியம் இல்லை.
38) கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க.
39) அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா? (நாழி - தானியங்களை அளக்கும் படி; அகவிலை - தானியவிலை)
40) திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு?
41) ஆற்றுணா வேண்டுவது இல்.
42) யானைக்கும் அடி சறுக்கும்.
43) பார்த்தாற் பசுபோல, பாய்ந்தாற் புலிபோல.
44) பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.
45) தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை.
46) ஆடிப்பட்டம் தேடி விதை.
47) மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
48) தை பிறந்தால் வழி பிறக்கும்.